10th October 2024 15:51:29 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 75 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினர் துப்புரவு திட்டங்களை மேற்கொண்டனர்.
11 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 ஒக்டோபர் 9ம் திகதி, குண்டசாலை மத்திய மாகாண ஆயுர்வேத வைத்தியசாலையை சுத்தம் செய்தனர். மேலும் 111 வது காலாட் பிரிகேட் இங்குருவத்த பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை ஒழுங்குபடுத்தியதுடன், 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தெல்தெனிய மாவட்ட வைத்தியசாலையைச் சுற்றிலும் சுத்தப்படுத்தினர். அத்துடன் இலங்கை சிங்க படையணி படையினர் மஹிய்யாவ முதியோர் இல்லத்தில் சிரமதான பணியாற்றினர்.
112 வது காலாட் பிரிகேட் படையினரால் ஒக்டோபர் 8 ஆம் திகதி ரிதிபான முதியோர் இல்லம், 23 வது விஜயபாகு காலாட் படையணி, சுஜாதா சிறுவர் இல்லம், 2 வது இலங்கை ரைபிள் படையணி, சம்போஹி முதியோர் இல்லம் ஆகியவற்றில் ஒக்டோபர் 9 ம் திகதியும், 641 காலாட் பிரிகேட்டினரால் லக்கல பிராந்திய வைத்தியசாலையும், மற்றும் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் லெனதொர ரஜமஹா விகாரையும், 1 வது இலங்கை ரைபிள் படையணியினரால் செனஹாச சிறுவர் அபிவிருத்தி நிலையத்திலும், 642 வது காலாட் பிரிகேட்டினரால் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலை மற்றும் பப்பாதாராமய விகாரை ஆகியவற்றில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கு முன்னதாக, 5 ஒக்டோபர் 2024 அன்று, 3 வது இலங்கை சிங்க படையணி படையினரால் சீதா எலிய மற்றும் பொரலந்த விகாரையிலும் அதே நேரத்தில் ஒக்டோபர் 9 நுவரெலியா லக்சபான பிராந்திய மருத்துவமனையிலும் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.