10th October 2024 11:02:10 Hours
75 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களினால் இலங்கை இராணுவத்தின் (நிரந்தர மற்றும் தொண்டர்) படையணிகளைச் சேர்ந்த 139 அதிகாரிகள் மற்றும் 1273 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
131 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் (உபகரண பொறுப்பாளர்கள் உட்பட) மற்றும் 08 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் (நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின்) அதிகாரிகள் பிரிவில் இவ்வாறு நிலை உயர்வு பெற்றுள்ளனர்.
99 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் II, அதிகாரவாணையற்ற அதிகாரிகள் I நிலைக்கும், 185 பணிநிலை சார்ஜன்கள் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் II நிலைக்கும், 380 சார்ஜன்கள் பணிநிலை சார்ஜன் நிலைக்கும், 346 கோப்ரல்கள் சார்ஜன் நிலைக்கும், 111 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், மற்றும் 152 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் நிலை உயர்வு பெற்றுள்ளனர்.