Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2024 15:31:07 Hours

3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் முதியோர் இல்லங்களில் சிரமதான பணிகள்

இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2024 ஒக்டோபர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் இரண்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இத் திட்டத்தில் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் படையினர் பெலியத்த, இஹல பெலிகல்ல, 'ரத்நாயக்க முதியோர் இல்லம் மற்றும் கதிர்காமம் அரச முதியோர் இல்லம் ஆகியவற்றை சுத்தம் செய்யும் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓர் அதிகாரி மற்றும் 15 படையினர் கலந்து கொண்டனர்.