08th October 2024 15:29:02 Hours
வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பாடநெறி எண் - 08 விடுகை அணிவகுப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 04 ஒக்டோபர் 2024 அன்று இலங்கை இராணுவப் பொறியியல் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையின் பதில் தளபதி கேணல் ஜேஎசீஎஸ் ஜாகொட பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
வருகை தந்த பிரதம அதிதியை, பதில் தளபதி மரியாதையுடன் வரவேற்றதுடன், பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
பின்னர், நோக்கக் கூற்று மற்றும் பணிகூற்று முனை பிரதம அதிதியால் திறந்து வைக்கப்பட்டதுடன், அவரது வழிகாட்டுதலின் இந்த நிர்மாண பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
படையினரால் நடாத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் செயல்விளக்கத்துடன் விழா அரங்கேறியது. தொடர்ந்து, பிரதம அதிதி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான வெடிகுண்டு செயலிழப்பு தகுதிகான் சின்னங்களை பதில் தளபதியுடன் சூட்டினார்.
இலங்கை பொறியியல் படையணியின் ஓர் அதிகாரி மற்றும் 23 சிப்பாய்கள் இந்நிகழ்வை கௌரவமான விழாவாக கொண்டாடினர்.
இந் நிகழ்வில் வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பாடநெறி எண் – 08 இல் சிறந்து விளங்கிய புதிய வெடிபொருட்களை அகற்றும் செயற்பாட்டாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிரதம அதிதி தனது உரையின் போது புதிதாக பயிற்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையில் பயிற்சிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு
தகுதி வரிசையில் முதல் இடம் - கெப்டன் என்.ஆர்.ஜே. துடவஹேவா
இரண்டாவது தகுதி - லான்ஸ் கோப்ரல் பி.எம்.எஸ்.எல் ஆரியரத்ன
தகுதி வரிசையில் மூன்றாவது இடம் – சிப்பாய் ஜீ.ஐ சம்பத்
மேஜர் ஜெனரல் டி.பி.எல் கொலோன் யூஎஸ்பீ இலங்கை இராணுவப் பொறியியல் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.சி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 12 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி, இலங்கை பொறியியல் படையணியின் பதில் நிலைய தளபதி, ஆலைப் பொறியியல் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.