Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2024 20:16:37 Hours

இலங்கை பீரங்கிப் படையணியில் காலம்சென்ற கேணல் திஸாநாயக்க அவர்களுக்கு இராணுவ தளபதியின் இறுதி அஞ்சலி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 08 ஒக்டோபர் 2024 அன்று இலங்கை பீரங்கிப் படையணியில் காலம்சென்ற கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு ஜயரத்ன வீஐபீ மலர்சாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தனது விஜயத்தின் போது, இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடியதுடன், அவர்களுக்கு தனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இலங்கை பீரங்கிப் படையணியின் காலம்சென்ற கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2024 ஓக்டோபர் 07 காலை சுகயீனம் காரணமாக காலமானார்.

காலம்சென்ற கேணல் டி.எம்.பி.பீ.பி திஸாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 1996 ஜூலை 15 பாடநெறி இல 45 இன் ஊடாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக் கொண்டார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 20 ஜூன் 1998 இல் இலங்கை பீரங்கிப் படையணியில் நியமிக்கப்பட்டார். தனது பணிக்காலம் முழுவதும், பல்வேறு நியமனங்களை வகித்து, அடுத்தடுத்த நிலைக்கு நிலை உயர்த்தப்பட்ட அவர் இறுதியில் 18 மே 2024 அன்று கேணல் நிலைக்கு உயர்தப்பட்டார். அவரின் மறைவின் போது ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் கேணல் (சேர்ப்பு) நியமனத்தை அவர் வகித்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.