08th October 2024 12:56:27 Hours
இலங்கை இராணுவம் தனது 75 வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களின் மகத்தான தியாகங்களை கௌரவிக்கும் முகமாக திங்கட்கிழமை (7) அன்று பத்தரமுல்ல போர் வீரர்களின் நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த சம்பிரதாய நினைவேந்தல் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து பயங்கரவாதம் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதை நினைவுகூருவதுடன், நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்காக தமது விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்திற்கு இராணுவம் செலுத்தும் கௌரவமான மரியாதை இதுவாகும்.
இராணுவத் தளபதியின் வருகையின் பின்னர், தேசிய கீதம் மற்றும் இராணுவ பாடல் ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீத்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மே 2009 க்கு முன்னர் மூன்று தசாப்த கால விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து மனிதபிமான நடவடிக்ககையில் இலங்கையின் ஆயுதப் படைகள் எவ்வாறு தமது இணையற்ற வீரம் மற்றும் துணிச்சலுடன் இலங்கைக்கு எவ்வாறு சமாதானத்தை பெற்று கொடுத்தார்கள் என்பதை ஒரு நேர்த்தியாக உடையணிந்த சிப்பாய் பகிரங்கப்படுத்தினார்.
அன்றைய பிரதம அதிதி, பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன், தேசத்திற்காக உயிர்நீத்த போர்வீரர்கள் சார்பாக போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இராணுவத் தளபதி மலர்வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தியதையடுத்து, இராணுவத் தலைமையகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையணியின் சார்ஜன் மேஜர் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அன்று மாலை நேரத்தில் இராணுவத்தின் இசைக்கலைஞர்களினால் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மெல்லிசை இசைக்கப்பட்டது. இறுதியில் உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவைப் போற்றும் இராணுவத்தின் இறுதி பியுகல் வாசிப்புடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, முதன்மை பணி நிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.