05th October 2024 17:20:07 Hours
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்.எம் அவர்கள் 03 ஒக்டோபர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் பதவி நிலை பிரதனி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, புதிய உதவி பாதுகாப்பு ஆலோசகர், பதவி நிலை பிரதனி ஆகியோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையிலான நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்டகால பிணைப்புகளை இருவரும் நினைவுகூர்ந்தனர்.
சுமூகமான சந்திப்பின் நிறைவில், இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தின் அடையாளமாக, உதவி பாதுகாப்பு ஆலோசகருக்கு சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்றை இராணுவப் பதவி நிலை பிரதனி வழங்கி வைத்தார்.