06th October 2024 14:26:51 Hours
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 30 செப்டம்பர் 2024 அன்று 592 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை 592 வது காலாட் பிரிகேட் தளபதி மரியாதையுடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகளால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேட் வளாகம் மற்றும் அதன் கட்டளை படையலகுகளை பார்வையிட்டதுடன், ஓட்டுசுட்டான் குழான்முறிப்பில் உள்ள ஓடு தொழிற்சாலையையும் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது, பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தளபாடங்களும் வழங்கப்பட்டன.