05th October 2024 17:21:16 Hours
2024 செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 6 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் 2024 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இலங்கை இலக்கியத்திற்கு ஒரு ஆழமான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. கண்காட்சி வரலாற்றில் முதல் தடவையாக, பிரதான கண்காட்சிக்கு இணையாக, போர் இலக்கியங்களை காட்சிப்படுத்தும் அரங்கை இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.
4 ஒக்டோபர் 2024 அன்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
போர் இலக்கியத்தின் மீதான இந்த புதிய கவனம் போருக்குப் பின்னரான சமூகங்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கின்றதுடன், சொல்லப்படாத கதைகளுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. புத்தகங்கள் மற்றும் கவிதைகள் முதல் திரைப்படங்கள் வரையிலான சிறப்புப் படைப்புகள், பொதுமக்களுக்கு முன்னர் அறியாத விடயங்கள் நூலாசிரியரின் தனிப்பட்ட அனுபவங்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.