Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2024 07:30:54 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூஜீபீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2024 ஒக்டோபர் 03 ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை தனது குடும்பத்தாருடன் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். தனது வாழ்க்கை முழுவதும் அவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி எடுத்துரைத்தார். பதிலுக்கு, மேஜர் ஜெனரல் டபிள்யூஜீபீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டலுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:

மேஜர் ஜெனரல் டபிள்யூஜீபீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் 1988 ஜனவரி 07 பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையில் இணைந்துக் கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 17 ஜூன் 1988 இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 25 ஏப்ரல் 2024 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 08 ஒக்டோபர் 2024 இல் தனது 57 வது வயதில் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் இருந்து ஓய்வு பெறுவார்.

5வது (தொ) இலங்கை இசோயுத காலாட் படையணியின் குழு தளபதி, 9வது (தொ) இலங்கை இசோயுத காலாட் படையணியின் அதிகாரி கட்டளை, 9வது (தொ) இலங்கை இசோயுத காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 9வது (தொ) இலங்கை இசோயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் தொடர்பு அதிகாரி, இலங்கை இசோயுத காலாட் படையணி தலைமையகத்தின் தொடர்பு அதிகாரி, 24 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி (தொண்டர்), 68 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி (தொண்டர்), இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் கேணல் பயிற்சி அதிகாரி, 1வது இலங்கை ரைபிள் படையணியின் கட்டளை அதிகாரி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு அதிகாரி, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு அதிகாரி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தின் பயிற்சி ஆய்வாளர் மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி உட்பட அவரது பணிக்காலம் முழுவதும் பல்வேறு முக்கிய நியமனங்களை அவர் வகித்துள்ளார்.

போர்க்களத்தில் அவரின் வீரமிக்க செயலுக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்ட படிப்புகளை முடித்துள்ளார், இதில் குழு தளபதி பாடநெறி (ஆயுத நிலை), குழு தளபதி பாடநெறி (தந்திரோபாயம் நிலை), குழு தளபதி பாடநெறி (தாக்குதல் நிலை), தாக்குதல் முன்னோடி பட்ட படிப்பு, மனித வள முகாமைத்துவ பாடநெறி, படையணி கணக்கு மற்றும் நூல் பராமரிப்பு பட்ட படிப்பு, இரண்டாம் கட்டளை பாடநெறி, கனிஷ்ட பணி நிலை பாடநெறி, அடிப்படை பாராசூட் பயிற்சி பாடநெறி மற்றும் கனிஷ்ட கட்டளை பாடநெறி- இந்தியா போன்ற பட்ட படிப்புகளையும் அவர் பயின்றுள்ளார்.