03rd October 2024 11:50:18 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் புதன்கிழமை (2) அன்று பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ இரண்டு பார்கள் மற்றும் பார் யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (ஆரம்ப கற்கை – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கை) எம்ஜிடி எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் ஆரம்ப கற்கை) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்களை புதன்கிழமை (2) அன்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தின் பூரண ஒத்துழைப்பை அமைச்சுக்கு வழங்குவதற்கு இராணுவத் தளபதி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். சுமுகமான இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு பற்றியும் ஏனைய தொடர்புடைய முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாற்றிக் கொண்டனர். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி, புதிய நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.