Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2024 19:40:33 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தின் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிஏசி பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2024 ஒக்டோபர் 02 ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் பிஏசி பெர்னாண்டோ யுஎஸ்பி அவர்கள் இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் பிஏசி பெர்னாண்டோ யூஎஸ்பி அவர்கள் 1990 நவம்பர் 15 இல் மருத்துவ மாணவராக இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். பின்னர் அவர் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2023 மே 04 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 06 ஒக்டோபர் 2024 இல் தனது 60 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார்.

தனது பணிக்காலம் முழுவதும், சிரேஷ்ட அதிகாரி பலாலி இராணுவத் தள வைத்தியசாலை, ,பிரதேசத் தலைமையகம் – வவுனியா, இராணுவ வைத்தியசாலை – கொழும்பு ஆகியவற்றின் வைத்திய அதிகாரி, 1வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, இராணுவ வைத்தியசாலை (கொழும்பு) இரண்டாம் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தில் இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர், கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர்,இராணுவத் தலைமையகத்தின் இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர், இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் வகித்துள்ளார். இவர் போர் நடவடிக்கைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்த போர்க்களத்தின் முன்னணி நபராவர். இராணுவத்திற்கான அவரது அர்ப்பணிப்பு சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவர் இராணுவ சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார், இது ஒரு சிரேஷ்ட மருத்துவ அதிகாரி மேஜர் ஜெனரல் பதவியில் வகிக்கக்கூடிய மிக சிரேஷ்ட மற்றும் மதிப்புமிக்க நியமனங்களில் ஒன்றாகும்.

சிரேஷ்ட அதிகாரி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மயக்கவியல் மருத்துவம் உள்ளிட்ட கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ளார்.