27th September 2024 16:42:58 Hours
இராணுவத் தளபதியும், கஜபா படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தான் வகித்த கஜபா படையணி படைத் தளபதி பதவியினை கையளிக்கும் புதிய படை தளபதியான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு அதிகார கோதை வழங்கினார்.
அதனடிப்படையில் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கஜபா படையணியின் 14வது படைத் தளபதியாக வியாழன் (26) அன்று அன்று அனுராதபுரம் சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய படைத் தளபதியை நிலைய தளபதி மரியாதையாக வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தையான மறைந்த மேஜர் ஜெனரல் டபிள்யூவிகேஎம் விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு படையணியின் படைத் தளபதி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் புதிய படைத் தளபதி அதிகாரிகளுக்கான உரையைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன. இந்நிகழ்வு படையணியின் மரபு மற்றும் சம்பிரதாயங்களுக்கமைய எளிமையாகவும் கண்ணியமாகவும் நடைப்பெற்றது.