Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2024 08:35:09 Hours

படையணிகளுக்கு இடையிலான 2024 இராணுவ ஜூடோ போட்டியில் கஜபா படையணி சாம்பியன்

2024 இராணுவ படையணிகளுக்கிடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசு வழங்கும் விழா 25 செப்டம்பர் 2024 அன்று பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைப்பெற்றது.

எடை அடிப்படையில் அணி மற்றும் தனிநபர் பிரிவுகள் இரண்டிலும் இடம்பெற்ற இந்தப் போட்டி 2024 செப்டம்பர் 22 முதல் 25 வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் 18 இராணுவப் படையணிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பதவிநிலை பிரதானியும் இராணுவ ஜூடோ குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். வருகை தந்த பிரதம அதிதியை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக வழங்கல் தளபதியும் இராணுவ ஜூடோ குழுவின் துணைத் தலைவருமான பிரிகேடியர் டபிள்யூ.எம்.எஸ்.என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.

அனைத்து போட்டி மற்றும் குழுப்போட்டிகளிலும் மொத்தமாக 37 புள்ளிகளை பெற்று கஜபா படையணி சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொண்டதுடன், இலங்கை இராணுவ போர் கருவி படையணி 29.5 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததுக்கொண்டது.

புதியவர்கள் பிரிவில், இலங்கை சிங்க படையணி சாம்பியனாகியதுடன், இலங்கை பீரங்கி படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பிடத்தக்க தனி நபர் திறன்கள் பின்வருமாறு:

- ஆண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் திறந்த போட்டி - இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் கோப்ரல் இ.எம்.என்.கே. சிந்தக – தங்கப் பதக்கம்.

- மகளிர் தனிநபர் சாம்பியன்ஷிப் திறந்த போட்டி - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் டபிள்யூ.எல்.ஏ.எச். இமேஷா – தங்கப் பதக்கம்.