24th September 2024 16:10:53 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 18 செப்டம்பர் 2024 அன்று தம்புள்ளை கிரலகொல்ல 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயமானது மொரகஹகந்த மற்றும் போவதென்ன மின் நிலையங்களை பரிசோதித்து அந்த இடங்களில் படையினரை நிலைநிறுத்துவதை மதிப்பீடு செய்ததோடு, அகுனுவெல்பெலஸ்ஸ பிராந்திய ஆயுதக் களஞ்சிய நிலையத்தையும் பார்வையிட்டார். இந்த முக்கியமான இடங்களில் படையினரின் நிலைநிறுத்தம் மற்றும் பாதுகாப்பு நிலைமையை ஆராய்வதை இந்த விஜயம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த காலாட் படைப்பிரிவு தளபதியை 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீ.கே. வருவாங்கொடகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதுடன், படையணியின் திட்டங்கள், செயற்பாடுகள், பணிகள், மற்றும் அதன் கடமைகள் உள்ளடக்கிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
காலாட் படைப்பிரிவு தளபதி அவரது விஜயத்தின் போது, படையினருடன் கலந்துரையாடி அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வழிகாட்டுதல்களை வழங்கினார். புறப்படும் முன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டு குறிப்புக்களை பதிவிட்டார்.
இந்த விஜயத்தின் போது 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.