24th September 2024 12:01:36 Hours
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்பிள்யூபீ மற்றும் இரண்டு பார்கள் மற்றும் பார் யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (ஆரம்ப கற்கை – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கை) எம்ஜிடி எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் ஆரம்ப கற்கை) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் 2024 செப்டெம்பர் 23 அன்று அக்குரேகொட பாதுகாப்புத் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
அவர், தனது கடமைகளை பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுப்பட்டார்.
மேலும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.