23rd September 2024 18:58:54 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 18 செப்டம்பர் 2024 அன்று 11 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
10 வது கஜபா படையணி படையினரின் சம்பிரதாய மரியாதையுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. வருகை தந்த தளபதியை 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மரியாதையுடன் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, தளபதி அவர்கள் முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்ததுடன், படையினருடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பொறுப்புக்கள், பணிகள் மற்றும் படைப்பிரிவின் கடமைகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
கலநதுரையாடலின் பின்னர், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றுகையில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள பொறுப்புகளை எடுத்துரைத்தார். இந்த விஜயத்தை நினைவுகூரும் வகையில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தளபதி கையெழுத்திட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.