Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd September 2024 12:41:56 Hours

இராணுவ இலங்கை பீரங்கி படையணியின் இளம் அதிகாரிகள் பயிற்சி பாடநெறி 49ன் பட்டமளிப்பு விழா

மின்னேரிய பீரங்கி படையணி பயிற்சி பாடசாலையில் 12 ஜூன் 2024 முதல் 14 செப்டம்பர் 2024 வரை நடத்தப்பட்ட பீரங்கி இளம் அதிகாரிகள் பயிற்சி பாடநெறி 49ன் மூலம் மூலம் தம்மை வளப்படுத்திக்கொள்ள இணைந்த பெருமைமிக்க மற்றும் மதிப்புமிக்க பீரங்கி படையணியின் பன்னிரெண்டு இளம் அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா 2024 செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் கலந்து கொண்டார்.

"ரஷ்யா-உக்ரைன் போரில் பீரங்கிகளின் பங்கு: வளர்ந்து வரும் போக்குகள்" என்ற பாட விளக்கத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பீரங்கி படையணி பிரிகேட் தளபதி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து பீரங்கி படையணிகளின் பிரதிநிதிகளும் கண்கவர் நிகழ்வை கண்டுகளித்தனர்.

ஒரு விரிவான விளக்கக்காட்சியின் முடிவில், பட்டமளிப்பு விழா 12 வார கால பாடத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் நடைபெற்றது.

இலங்கை பீரங்கி படையணியின் 7வது இலங்கை பீரங்கி படையணியின் கேப்டன் ஜே.பி.சி.சிங்கவன்ஷாவுக்கு இந்தப் பாடநெறியில் சிறந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் "சில்வர் கன்" விருது வழங்கப்பட்டது.

நிகழ்வின் உச்சக்கட்டமாக மின்னேரிய அதிகாரிகள் உணவகத்தில் இரவு உணவு இடம்பெற்றது.