22nd September 2024 12:56:23 Hours
58 வது காலாட் படைப்பிரிவினால் 2024 செப்டம்பர் 14 அன்று வெளியேறும் தளபதி மேஜர் ஜெனரல் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 58 வது காலாட் படைப்பிரிவு இலங்கை இராணுவத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக 35 வருடங்களுக்கும் மேலான சிறப்பு சேவையின் இறுதியில் ஓய்வுபெறும் போது அவருக்கு மனமார்ந்த கௌரவத்தினை தெரிவித்துக் கொண்டது.
நாளின் முதல் நிகழ்வாக வருகை தந்த மேஜர் ஜெனரல் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களை பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து கேணல் எம்எம்டப்ளியூ ரூபசிங்க (கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி ) அவர்களினால் வரவேற்கப்பட்டார். தொடர்ந்து, வெளியேறும் 58 வது காலாட் படைப்பிரிவின் முன்னாள் தளபதி அவர்கள் கேணல் பொதுப்பணிநிலை கேணல் எல் ஆர் அமரசேகர அவர்களுடன் இணைந்து இராணுவ மரபுகளுக்கு அமைய அணிவகுப்பு மரியாதையினை பரிசீலனை செய்தார்.
பின்னர், வெளியேறும் தளபதி, 58 வது காலாட் படைப்பிரிவின் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன் இறுதி நிகழ்வாக அனைத்து நிலையினருடனான தேநீரில் இணைந்து கொண்டார்.
பிரிகேட் தளபதிகள்,58 வது காலாட் படைப்பிரிவு படையலகு பயிற்சி பாடசாலை தளபதி, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.