22nd September 2024 12:45:22 Hours
மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 11 செப்டம்பர் 2024 அன்று படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இராணுவ புலனாய்வுப் படையணியின் 26 வது படைத் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
நிகழ்வுகள் நிலைய தளபதியின் வரவேற்புடன் ஆரம்பமாகின, அதனைத் தொடர்ந்து படையணியின் படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தளபதி நினைவுத்தூபியில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் இராணுவ புலனாய்வுப் படையணி படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை மதிப்பாய்வு செய்தார்.
பின்னர் புதிய படையணியின் படைத் தளபதி குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். மேலும் முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டினார். தொடர்ந்து அனைத்து நிலையினருக்கும் உரையாற்றுகையில் தனது எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டார்.