21st September 2024 20:59:38 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2024 செப்டெம்பர் 17 அன்று ராகமை, படுவத்த மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 31வது "வட்ஜரி 2024" நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
வருகை தந்த மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியை இலங்கை சாரணர் சங்கத்தின் அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.
இவ்விழாவின் போது, சாரணர் முகாமின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் முதன்மை நோக்கங்களை வலியுறுத்தி, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி அவர்கள் கூடியிருந்த சாரணர்களுக்கு உரையாற்றினார். அவரது வார்த்தைகள் இளம் சாரணர்களை சாரணர் மற்றும் தலைமைத்துவத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த ஊக்குவித்தன.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி தனது உரையைத் தொடர்ந்து "வட்ஜரி 2024" இன் சிறந்த சாரணர்களுக்கு விருதுகளை வழங்கினார். களனி தர்மலோக வித்தியாலயம் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன், கந்தானை டி மஸெனோட் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
"வட்ஜரி 2024" இன் வெற்றிகரமான உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.