21st September 2024 20:50:22 Hours
மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் 2024 செப்டெம்பர் 18ம் திகதி விஜயபாகு காலாட் படையணியின் 23 வது படைத் தளபதியாக பதவியேற்றார்.
வருகை தந்த தளபதியை பிரதான நுழைவாயிலில் நிலைய தளபதி மரியாதையுடன் வரவேற்றதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரி மரியாதை செலுத்தும் விதமாக வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவுச்சின்னம் மற்றும் பீடபிள்யூவீ நினைவுச்சின்னம் ஆகிய இரண்டிலும் மலர்வளையம் வைத்து, தாய்நாட்டைப் பாதுகாப்பதில் இறுதித் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, படையணியின் புதிய படைத் தளபதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, பிரித் பாராணயங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர் சம்பிரதாயத்திற்கமைய படையணி தலைமையகத்தில் மரக்கன்று ஒன்று நட்டு வைத்ததுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
"தி சல்யூட்" பல்லூடக மண்டபத்தில் சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றியதோடு, அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.