20th September 2024 12:30:38 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2024 செப்டம்பர் 18 அன்று 52 வது காலாட் படைப்பிரிவில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விரிவுரை நடத்தப்பட்டது.
52 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு கேணல் ஆர்எம்என் ரத்நாயக்க கேஎஸ்பீ அவர்களினால் இவ்விரிவுரை நிகழ்த்தப்பட்டது. இவ் விரிவுரைவில் பல்வேறு வகையான போதைப்பொருட்கள், வீரர்கள் எப்படி அடிமையாகிறார்கள், போதைப்பொருள் பாவனையின் தீங்கான விளைவுகள், போதை பழக்கத்தை முறியடிப்பதற்கான உத்திகள் மற்றும் குடும்பங்களில் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளில் விரிவுரை நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.