20th September 2024 12:40:51 Hours
மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 20 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய தளபதியை 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர், விழாவை முன்னிட்டு மரக்கன்று நாட்டியதுடன், குழு படம் எடுத்துக் கொண்டார். பின்னர் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். சம்பிரதாயங்களுக்குப் பிறகு, புதிய தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருடன் தேனீர் விருந்துபசாரத்திலும் கொண்டார்.
தொடர்ந்து, மாநாட்டு மண்டபத்தில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் அதன் கட்டளை அமைப்புக்களின் சிரேஷ்ட அதிகாரிகளால் விரிவான விளக்கமளிப்பு வழங்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.