19th September 2024 18:45:12 Hours
இலங்கை பீரங்கி படையணி படைத்தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் பீரங்கி பாடசாலை 24 ஆகஸ்ட் 2024 அன்று மின்னேரியா பீரங்கி வளாகத்தில் மரக்கன்று நடும் திட்டத்தை முன்னெடுத்தது.
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவையும் கொமர்ஷல் வங்கியின் 104 வது ஆண்டு நிறைவையும் நினைவுகூரும் வகையில், கொமர்ஷல் பேங்க் ஆப் சிலோன் பீஎல்சியின் கடன் மேற்பார்வை மற்றும் மீட்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பீரங்கி வளாகத்தில் 50 மாங்கன்றுகளும், 54 தென்னம் பிள்ளைகளும் நடப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கொமர்ஷல் வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.