19th September 2024 19:04:54 Hours
பிரிகேடியர் டபிள்யூஎம்ஏபி விஜயகோன் யூஎஸ்பீ என்டிசீ அவர்கள், 09 செப்டம்பர் 2024 அன்று இராணுவ தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய பணிப்பாளர் புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாரயணங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பிரிகேடியர் டபிள்யூஎம்எபி விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இப் புதிய நியமனத்திற்கு முன்னர் கஜபா படையணியில் நிலைய தளபதியாக பணியாற்றினார். இந்நிகழ்வில் நலன்புரி பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.