19th September 2024 19:48:08 Hours
நிதி முகாமைத்துவம் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎம்கேஜீபீஎஸகே அபேசிங்க அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் தொழிற்துறை பாடசாலை, 1 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி ஆகியவற்றிகு 2024 செப்டம்பர் 03 அன்று விஜயம் மேற்கொண்டார்.
படைத் தளபதியை வரவேற்கும் முகமாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து முகாம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது. படைத் தளபதி தனது உரையில், பயனுள்ள அறிவுறுத்தலின் முக்கியத்துவம், பயிற்றுவிப்பாளர்களின் தரம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் உட்பட தொடர்ந்து பயிற்சி மற்றும் மேம்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
1 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணிகளின் கட்டளை அதிகாரிகளின் விளக்க உரையினை தொடர்ந்து தொழிற்துறை பாடசாலையின் தளபதி, நிறுவனத்தின் கடமைகள், பொறுப்புகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் நிர்வாக விடயங்களை தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார்.
பின்னர் முகாம் வளாகம் மற்றும் பாடசாலையின் முக்கிய பகுதிகளை படைத் தளபதி ஆய்வு செய்ததுடன் குழு படம் மற்றும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்து என்பவற்றில் கலந்துகொண்டார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.