19th September 2024 19:37:17 Hours
பசுமை விவசாயம் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீ.பீ. அரங்கல்ல பீஎஸ்சீ, அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் முன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் 19 செப்டம்பர் 2024 அன்று குடும்ப உறுப்பினர்களுடன், இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காகவும், அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கிற்கும் இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் சீ.பீ. அரங்கல்ல பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் சீ.பீ. அரங்கல்ல பீஎஸ்சீ, அவர்கள் 1990 நவம்பர் 03 ம் திகதி பாடநெறி இல 35பி இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 14 நவம்பர் 1992 இல் இலங்கை சமிஞ்ஞை படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2024 பெப்ரவரி 16, அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 25 செப்டம்பர் 2024 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார்.
சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில் 1வது இலங்கை சமிஞ்சை படையணியில் குழு கட்டளை அதிகாரி, 17 வது காலாட் பிரிகேட்டின் சமிஞ்சை அதிகாரி, 6 வது காலாட் பிரிகேட்டின் சமிஞ்சை அதிகாரி, 53 வது காலாட் படைப்பிரிவின் சமிஞ்சை அதிகாரி, 1வது சமிஞ்சை படையணியின் நிறைவேற்று அதிகாரி, 6 வது வலுவூட்டல் படையணியின் நிறைவேற்று அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் சமிஞ்சை படையின் சமிஞ்சை அதிகாரி, சமிஞ்சை அடிப்படை வேலைத்தள இலத்திரனியல் போர் உபகரணப் பிரிவின் பொறுப்பதிகாரி, சமிஞ்சை அடிப்படை வேலைத்தள பணி நிலை அதிகாரி 2. 53 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணி நிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்), சமிஞ்சை பிரிகேட்டின் பணி நிலை 1 (நிர்வாகம்), இராணுவத் தலைமையகத்தின் பிரதி சமிஞ்சை அடிப்படை வேலைத்தள பொதுப் பணி நிலை அதிகாரி 1 (தொடர்பு), 22 வது காலாட் படைப்பிரிவின் பொது பணி நிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 9 வது இலங்கை சமிஞ்சை படையணியின் கட்டளை அதிகாரி, ஹைட்டி ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் படையின் பணி நிலை அதிகாரி, 6வது வலுவூட்டல் சமிஞ்சை படையணியின் கட்டளை அதிகாரி, 1வது இலங்கை சமிஞ்சை படையணியின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர், இலங்கை சமிஞ்சை படையணி தலைமையக பிரதி நிலைய தளபதி, 62 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொது பணி, மேலதிக செயல்பாட்டுக் கட்டளை கேணல் பொதுப் பணி, இராணுவப் பயிற்சிக் கட்டளை தலைமையகத்தின் கேணல் பொது பணி, இராணுவப் பயிற்சிக் கட்டளை தலைமையகத்தின் கேணல் மூலோபாய மற்றும் கோட்பாடு, கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையத்தின் பிரிகேடியர் (பகுப்பாய்வு), , கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையத்தின் பிரிகேடியர் (ஒருங்கிணைப்பு), பசுமை விவசாயம் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாட்டு நிலையத்தின் பிரிகேடியர் (ஒருங்கிணைப்பு), மற்றும் பசுமை விவசாயம் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் உட்பட பல்வேறு முக்கிய நியமனங்களை அவர் தனது பணிக்காலம் முழுவதும் வகித்துள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ பணியின் போது அதிகாரிகள் சிறப்பு பாடநெறி, பயிற்றுனர்கள் பாடநெறி (விசேட படையணி பயிற்சி பாடசாலை), செயல்பாட்டு பணியாளர் கடமைகள் பாடநெறி , ராடர் பாடநெறி, (நிறுவனம் மின்சார மற்றும் மின்னணுவியல் பொறியியல் நிறுவனம், இராணுவ கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி, சீனாவில் ராடர் பராமரிப்பு குறித்த பயிற்சி பாடநெறி, இந்தியா சமிஞ்சை இளம் அதிகாரிகள் பாடநெறி மற்றும் பாகிஸ்தானில் இராணுவ கட்டளை மற்றும் பணி நிலை பாடநெறி உட்பட பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பட்டபடிப்புகளை முடித்துள்ளார்.
மேலும், சிரேஷ்ட அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் மின் பொறியியல் இளங்கலை விஞ்ஞானம் (பாதுகாப்பு ஆய்வுகள்), களனி பல்கலைக்கழகத்தில் முதுகலை பாதுகாப்பு கற்கைகள், முதுகலை விஞ்ஞானம் போன்ற இராணுவ சாராத பாடநெறிகளை மேற்கொண்டுள்ளார். பாக்கிஸ்தான் பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம், அமெரிக்காவில் கடற்படை முதுகலை பாடசாலையில் பாதுகாப்பு ஆய்வுகள் (சிவில்-இராணுவ உறவுகள்), தற்காப்பு கலை போன்ற பாடநெறிகளையும் கற்றுள்ளார்.