19th September 2024 11:25:17 Hours
சினெர்ஜியா அறக்கட்டளை, நாளந்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2024 செப்டம்பர் 12 முதல் 14 வரை பகிரப்பட்ட மதிப்புகள், பகிரப்பட்ட கலாசாரம் மற்றும் எதிர்காலம் தொடர்பான தொடக்கம் தொடர்பிலான விரிவுரையினை நாளந்தா புத்தகயா பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நடத்தியது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடக பேச்சாளரும் தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் நாயகமுமான கேணல் எம்பீபீபி ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சவால்கள் தொடர்பாக உரையை நிகழ்த்தினார். எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கவும், அழுத்தமான பிரச்சினைகளை சமாளிக்கவும் பகிரப்பட்ட கலாசாரத்தின் திறனையும் அவர் தனது விரிவுரையில் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மை போன்ற உலகளாவிய சவால்கள் தொடர்பான அர்த்தமுள்ள உரை வழங்கப்பட்டது. பௌத்தத்தின் தத்துவ மரபுகள் மற்றும் நாளாந்தாவின் பாரம்பரியம்,பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் நாகரிகங்களை பிணைக்கும் கலாசாரம் தொடர்பான நுண்ணறிவுகளையும் பண்டைய நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வழிகளையும் நவீன சவால்களையும் பகிர்ந்து கொண்டனர்.