Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2024 17:08:47 Hours

59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 16 செப்டம்பர் 2024 அன்று 59 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பணிநிலை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன.

காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி அவரது அலுவலகத்தில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். மேலும் காலாட் படைப்பிரிவின் தளபதி அன்றைய நாளுக்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் படைப்பிரிவு வளாகத்தில் ஒரு மரக்கன்று நடுவதற்கு அழைக்கப்பட்டதுடன், அவர் சில குழுப்படங்களும் எடுத்துக்கொணடார்.

பின்னர், இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றிய அவர் படைப்பிரிவுக்கான தனது எதிர்காலத்தில் திட்டங்களை தெரிவித்தார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.