18th September 2024 13:43:55 Hours
இலங்கை இராணுவ சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானியாக 2024 செப்டம்பர் 18 அன்று இராணுவ தலைமையகத்தில் பதவியேற்றார்.
புதிய இராணுவ பதவி நிலை பிரதானி, மகா சங்கத்தினரின் செத்பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய பதவியினை ஏற்றுக்கொண்டதை அடையாளப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து, இராணுவ பதவி நிலை பிரதானி பிக்குகளுடன் உரையாடியதுடன், பிரிகர மற்றும் கிலான்பச (தானம்) என்பவற்றினை வழங்கினார்.
இந்த நியமனத்திற்கு முன்னர், சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியாக பணியாற்றினார். இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.