Header

Sri Lanka Army

Defender of the Nation

17th September 2024 13:11:29 Hours

முதலாம் படை தளபதி கட்டளை அமைப்புகளுக்கு விஜயம்

முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2024 செப்டம்பர் 09 முதல் 11 வரை விஷேட படையணி பிரிகேட், 3,2 வது கொமண்டோ படையணி, 581 வது பிரிகேட் மற்றும் 5 வது விஜயபாகு காலாட் படையணி என்பவற்றிக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை படைப்பிரிவு, பிரிகேட் மற்றும் படையலகு சிப்பாய்களினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டதுடன் பிரிகேட் தளபதி மற்றும் படையலகு கட்டளை அதிகாரிகளால் பொறுப்பு, பணிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிரேஸ்ட அதிகாரி மரக்கன்றினை நாட்டியதுடன் குழு படம் எடுத்துகொண்டு அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரம் மற்றும் படையினருக்கான உரை என்பவற்றில் கலந்துக்கொண்டார்.

இவ் விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.