17th September 2024 12:06:04 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 22 வது காலாட்படை பிரிவில் இருந்து வெளியேறும் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு 11 செப்டம்பர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வை ஏற்பாடு செய்துருந்தனர்.
வருகையின் போது தளபதிக்கு, பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வ ஒப்படைப்பு ஆவணத்தில் தளபதி கையொப்பமிட்டார்.
அன்றைய நாளின் நினைவாக வெளியேறும் தளபதி குழுபடம் எடுப்பதற்கு அழைக்கப்பட்டார். அன்றைய சாம்பிரதாய நிகழ்வுகள் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவுபெற்றன. அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் சிவில் ஊழியர்கள் பங்குபற்றினர்.