16th September 2024 11:24:07 Hours
54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் தனது 14 வது ஆண்டு நிறைவை 54 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் 10 செப்டம்பர் 2024 அன்றுகொண்டாடியது.
14 வது ஆண்டு நிறைவை ஒட்டி, படைப்பிரிவுக்கு ஆசீர்வாதங்களை வழங்கும் வகையில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவம் உள்ளிட்ட மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. மேலும் 2024 ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 08 வரை, கிரிகெட்,கரப்பந்து மற்றும் கயிறு இழுத்தல் உட்பட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
பரபரப்பான கிரிக்கெட் இறுதிப்போட்டியில், 8 வது விஜயபாகு காலாட் படையணி சம்பியனாகியதுடன் 4 வது விஜயபாகு காலாட் படையணி கரப்பந்து சம்பியன்ஷிப் மற்றும் கயிறு இழுத்தல் போட்டி இரண்டிலும் வெற்றி பெற்று தமது பலத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியது. 08 செப்டெம்பர் 2024 அன்று படைப்பிரிவு தளபதி மற்றும் பிரிகேட் தளபதிகள் மற்றும் படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரிகளின் பங்கேற்புடன் படையினரை மகிழ்விக்க மாலையில் இசை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவின் நிறைவாக படைப்பிரிவு தளபதியின் படையினருக்கான உரை 10 செப்டம்பர் 2024 இடம்பெற்றதுடன் அதில் படையினரின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் படைப்பிரிவின் வெற்றிக்கான பங்களிப்பை பாராட்டிய அவர், 54 வது காலாட் படைப்பிரிவின் பாரம்பரியத்தின் மையத்தில் உள்ள ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சேவையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். பின்னர் பிரிவுக்குள் நெருக்கமான பிணைப்புகளை அடையாளப்படுத்துவது மற்றும் அதிகாரிகள், அதிகாரவாணை அதிகாரிகள் மத்தியில் நட்புறவு உணர்வை வளர்ப்பதினை காண்பிக்கும் வகையில் அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் தளபதி இணைந்துகொண்டார்.
படைப்பிரிவின் மரபுகளுக்கு இணங்க, பிரிவு வளாகத்திற்குள் அமைந்துள்ள "மனு வெஹெர" விகாரையில் மாலையில் நடைபெற்ற போதி பூஜையுடன் ஆண்டு விழா நிறைவு பெற்றது. இந்த மத நிகழ்வு ஆன்மீக பிரதிபலிப்பு மற்றும் நன்றியுணர்வின் தருணத்தை வழங்கியதுடன் மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் அதே வேளையில் படையினருக்கு அவர்களின் கோரும் பாத்திரங்களுக்கு மத்தியில் உள் வலிமை மற்றும் அமைதியின் முக்கியத்துவத்திய நினைவுபடுத்தியது.