Header

Sri Lanka Army

Defender of the Nation

14th September 2024 20:50:16 Hours

புதிய படைத்தளபதி 4 வது இலங்கை கவச வாகன படையணிக்கு முதல் விஜயம்

64 வது காலாட் படைப்பிரிவு தளபதியும் இலங்கை கவசவாகன படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 4 வது இலங்கை கவச வாகன படையணிக்கு தனது முதல் விஜயத்தினை 9 செப்டம்பர் 2024 அன்று மேற்கொண்டார். வருகை தந்த படைத்தளபதியை 4 வது இலங்கை கவச வாகன படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜீஐடிடி தர்மரத்ண ஆர்எஸ்பீ யூஎஸ்பீ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார். பின்னர், நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டதுடன், வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர் தனது விஜயத்தின் போது, முகாமில் மரக்கன்று நாட்டியதுடன், 4 வது இலங்கை கவச வாகன படையணிக்கு தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார். படைத்தளபதி அவர்கள் கட்டளை அதிகாரியின் விரிவான விளக்கத்தில் கலந்து கொண்டதுடன் அதைத் தொடர்ந்து முகாம் வளாகத்தை ஆய்வு செய்தார். பின்னர், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் சிரேஷ்ட அதிகாரி பங்கேற்றதனை தொடர்ந்து படையினருக்கான உரை நடைபெற்றது.

அதிகாரிகள் உணவகத்தில் படைத்தளபதி மதிய உணவு விருந்தில் கலந்துகொண்டதுடன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இவ் விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.