13th September 2024 22:31:42 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் 13 செப்டம்பர் 2024 அன்று குடும்ப உறுப்பினர்களுடன், இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காகவும், அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கிற்கும் இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். இதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:
மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 1990 செப்டெம்பர் 07 ம் திகதி பாடநெறி இல 02 இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 13 மார்ச் 1991 இல் இலங்கை கவச வாகன படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2023 ஒக்டோபர் 31, அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 15 செப்டம்பர் 2024 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார்.
3வது இலங்கை கவச வாகன படையணியின் குழு கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை கவச வாகன படையணியின் குழு கட்டளை அதிகாரி, கவச வாகன படையணியின் பயிற்சி பாடசாலையின் நிறைவேற்று அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பிரிவின் அதிகாரி பயிலிளவல், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பிரிவின் நிறைவேற்று அதிகாரி, 5வது இலங்கை கவச வாகன படையணியின் சபர் பிரிவின் அதிகாரி கட்டளை, 4வது இலங்கை கவச வாகன படையணியின் சபர் பிரிவின் அதிகாரி கட்டளை, இராணுவ தலைமையக ஊடக பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2, 4வது இலங்கை கவச வாகன படையணியின் (ஆர்எப்டி) இரண்டாம் கட்டளை அதிகாரி, 55 வது காலாட் படைப்பிரிவின் பிரதி பொது பணிநிலை அதிகாரி 1,இராணுவ தலைமையகத்தின் இராணுவ தளபதியின் பாதுகாப்புப் பொறுப்பாளர் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு ஒருங்கினைப்பு அதிகாரி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐநா அமைதி காக்கும் பணியின் இராணுவக் கண்காணிப்பாளர், 8வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி, கவச வாகன படையணிப் பயிற்சி நிலையத்தின் தளபதி, இராணுவச் செயலாளர் கிளையின் பணிநிலை அதிகாரி 1 (தொண்டர்), வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் (பொதுபணி), 212 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதித் தளபதி, கவச வாகன பிரிகேட் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் பிரதித் தளபதி, இராணுவத் தலைமையக விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் 22 வது காலாட் படை பிரிவின் தளபதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நியமனங்களை அவர் தனது பணிக்காலம் முழுவதும் வகித்துள்ளார்.
போர்க்களத்தில் அவரது வீரத்திற்காக அவருக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட அதிகாரி தனது சேவை முழுவதும், பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதில், 47 பணிகள் முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மூன்றின் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, இராணுவத் தளபதி அவருக்கு பாராட்டுப் பதக்கத்தை வழங்கினார்.
சிரேஷ்ட அதிகாரி, இளம் அதிகாரிகள் பாடநெறி, பிரிவு நிர்வாகம் பாடநெறி, பிரிவு பாகாப்பு அதிகாரி பாடநெறி, இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஆண்களின் பங்கேற்பு தொடர்பான பயிற்றுனர்கள் பாடநெறி,இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஆண்களின் பங்கேற்பு தொடர்பான பயிற்றுனர்கள் பாடநெறி (ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தால் (UNFPA) ஏற்பாடு செய்யப்பட்டது - இலங்கை), சாத்தியமான பிரிவு தளபதிகள் பாடநெறி, தகவல் தொழில்நுட்ப பாடநெறியின் அடிப்படைகள், மனித உரிமைகள் சட்டப் பாடநெறி, ஆயுத மோதல் சட்டம் பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சி பாடநெறி, ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பாடநெறி, இராணுவ கண்காணிப்பாளர்கள் மற்றும் இராணுவ கட்டளை மற்றும் பணி நிலை பாடநெறி, அதிகாரி பயிலிளவல் பயிற்சி பாடநெறி (பாகிஸ்தான்), இளம் அதிகாரிகள் (கவச) பாடநெறி (இந்தியா) , கவச அதிகாரிகள் மேம்பட்ட தொழிநுடப் பாடநெறி (பாகிஸ்தான்), போர் குழு கட்டளை அதிகாரி பாடநெறி (இந்தியா), ஐக்கிய நாடுகளின் குடிமக்களின் பாதுகாப்பு பாடநெறி (கொங்கோ), கவச வாகன படையலகு கட்டளை அதிகாரி (சீனா) மற்றும் சமூக அடிப்படையிலான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பாலினத்தை முதன்மைப்படுத்துதல் பாடநெறி (கென்யா) உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளை தனது இராணுவ வாழ்க்கையில் பயின்றுள்ளார்.
மேலும், சிரேஷ்ட அதிகாரி இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் தேசிய ஆலோசனைக்கான தேசிய டிப்ளோமா, களனி பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ முதுகலை டிப்ளோமா, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சியில் இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்கள் தொடர்பான டிப்ளோமா, மற்றும் சீனாவில் உள்ள ஹூவாஜா பல்கலைக்கழகத்தில் சீன மொழி மற்றும் கலாசார கல்வியில் டிப்ளோமா போன்ற இராணுவ சாராத பாடநெறிகளை பயின்றுள்ளார்.