07th September 2024 12:43:44 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் முகாமைத்துவ இக்கூட்டமானது 06 செப்டம்பர் 2024 அன்று இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த சபை கூட்டம் கல்வியற் கல்லூரியின் இலக்குகளை அடைவதற்கு இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்சி மற்றும் நிர்வாகத்தை மதிப்பீடு செய்வதற்கு வடிவமைக்கப்பட்டதாகும். முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் பொது, நிர்வாக மற்றும் வழங்கல் சிக்கல்கள் தொடர்பான கலந்துரையாடல்களுடன் சவால்களுக்கு பயனுள்ள தீர்வுகளும் இதன்போது கண்டறியப்பட்டன.
பொதுப் பணி பணிப்பாளர் நாயகம், பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர், ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த சபை கூட்டத்தில் பங்கேற்றனர்.