13th September 2024 18:08:03 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 61 வது காலாட் படைப்பிரிவு, 613 வது காலாட் பிரிகேட் பிரிவு மற்றும் 9 வது சிங்க படையணி என்பவற்றிக்கு 2024 செப்டம்பர் 11 அன்று விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை படைப்பிரிவு, பிரிகேட் மற்றும் படையலகு சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி ஒவ்வொரு முகாம் வளாகத்திலும் கன்றுகளை நட்டதுடன் படையினருடன் குழு படமும் எடுத்துகொண்டார். இவ் விஜயத்தின் போது தளபதிக்கு சிரேஷ்ட அதிகாரிகளால், பொறுப்பு, பணிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
விளக்கங்களைத் தொடர்ந்து, தளபதி அவர்கள் படையினருக்கு உரையாற்றினார். விஜயத்தின் நிறைவாக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது.