12th September 2024 12:10:40 Hours
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் அழைப்பின் பேரில், 11 செப்டெம்பர் 2024 அன்று பல்கலைக்கழக விரிவுரை மண்டபத்தில் குறிப்புணர்த்தல் முகாமை தொடர்பான விரிவுரை நடத்தப்பட்டது. இவ்விரிவுரையை ஊடக பணிப்பகத்தின் மேஜர் எம்எச்எம்எஸ் பண்டார எல்எஸ்சீ அவர்கள் நடத்தினார்.
இந்த விரிவுரையில் முகாமைத்துவ நடைமுறைகளில் குறிப்புணர்த்தல் பங்கு தொடர்பாகவும், தொடர்பாடல், தலைமைத்துவம் மற்றும் குழு செயற்பாடுகளில் அதனை பிரயோகிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது. அறுபது பட்டக் கலவி மாணவர்கள் இவ்விரிவுரையில் கலந்து கொண்டனர்.