11th September 2024 23:44:39 Hours
இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2024 செப்டெம்பர் 11 ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்பாட்டிற்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரியைப் பாராட்டினார்.அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி நினைவு கூர்ந்தார். பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டு சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளுடன் விசேட நினைவுச் சின்னங்களையும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி பாடநெறி இல. 31 இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக் கொண்டார். இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி தியத்தலாவ - இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், இரண்டாம் லெப்டினன் நிலையில் 1990 ஒக்டோபர் 05 திகதி விஜயபாகு காலட் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு இறுதியில் 10 ஓகஸ்ட் 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 16 செப்டம்பர் 2024 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
அவரது பணிக்காலம் முழுவதும், 5வது விஜயபாகு காலாட் படையணியின் குழு தளபதி, புலனாய்வு அதிகாரி மற்றும் அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் அதிகாரி பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், நிறுவனத் தளபதி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி நிறைவேற்று அதிகாரி, 222 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், விஜயபாகு காலாட்படை தலைமையகத்தின் நிறைவேற்று அதிகாரி, 7 வது விஜயபாகு காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 4 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி, விஜயபாகு காலாட்படை தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 1, காலாட் படையணி பயிற்சி நிலையத்தின் விஷேட கனிஷ்ட அதிகாரி பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இராணுவ தலைமையக நடவடிக்கை பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1 (நடவடிக்கைகள்), ஐக்கிய நாடுகளின் பல பரிமாணம் ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணி ஹய்டி இராணுவ பணிநிலை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரி பயிலிளவல் அதிகாரி பயிற்சி பிரிவின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் பொதுப்பணி, 571 வது காலாட் பிரிகேட் பிரதி பிரிகேட் தளபதி, 553 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி முதன்மைப் பணிநிலை அதிகாரி, இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி, 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி காரியாலத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், விஜயபாகு காலாட் படையணி படைத்தளபதி, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் இராணுவ தலைமையக இராணுவ பதவி நிலை ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
அவரது வீரமிகு சேவைக்காக சிரேஷ்ட அதிகாரிக்கு ரண விக்கிரம பதக்கம் (நான்கு முறை), மற்றும் ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் அணி கட்டளை அதிகாரி தந்திரோபாய பாடநெறி, படையலகு உதவி ஆயுத அதிகாரி பாடநெறி, அடிப்படை குறிப்பார்த்து சுடல் பாடநெறி, பீரங்கி கண்காணிப்பாளர் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை கனிஷ்ட அதிகாரி பாடநெறி (பாகிஸ்தான்), கனிஷ்ட கட்டளை பாடநெறி (இந்தியா), அதிகாரிகள் போக்குவரத்து முகாமைத்துவ பாடநெறி(இந்தியா), இராணுவ படையலகு கட்டளை அதிகாரி பாடநெறி (சீனா) மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய உயர் டிப்ளமோ பாடநெறி (சீனா) உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் கற்கைகளையும் பயின்றுள்ளார்.