Header

Sri Lanka Army

Defender of the Nation

11th September 2024 15:29:19 Hours

9 வது விஜயபாகு காலாட் படையணியினால் சிவில் ஊழியர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு

9 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் சி.டி.பி ஜயதிலக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 30 வரை படையலகின் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சுற்றுலாவில் சேருவில விகாரை, திருகோணமலை கடற்படை அருங்காட்சியகம், ஓர்ஸ் ஹில் இராணுவ அருங்காட்சியகம் மற்றும் திருகோணமலை கடற்படை தளத்தில் படகு சவாரி ஆகியவை உள்ளடங்கின. பங்கேற்பாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இரவு உணவுடன் நிகழ்வு நிறைவுற்றது.