12th September 2024 12:35:35 Hours
52 வது காலாட் படைப்பிரிவு 29 வது ஆண்டு நிறைவு விழாவை 09 செப்டம்பர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் 52 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர். பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
ஆண்டு நிகழ்வின் தொடர் அம்சமாக படைப்பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பன வழங்கப்பட்டதை தொடர்ந்து மரக்கன்று நாட்டல், குழு படம் எடுத்தல் போன்றன இடம்பெற்றன. மாலை இசை நிகழ்வுடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்த்துடன், ஏராளமான படையினர் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.