10th September 2024 21:59:17 Hours
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்எஎன்ஜே ஆரியசேன அவர்களுக்கு 08 செப்டம்பர் 2024 அன்று மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தினால் பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இராணுவ பாரம்பரிய மரபுகளுக்கமைய சிரேஷ்ட அதிகாரியை படையணி நிலைய தளபதி கேணல் டீஏ சிரிமான்னகே அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தளபதி அணிவகுப்பு மரியாதை வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுடனான சந்திப்பின் பின்னர் சிரேஷ்ட அதிகாரி, அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
மாலையில், சிரேஷ்ட அதிகாரியை கௌரவிக்கும் வகையில், அதிகாரிகள் உணவகத்தில் விருந்துபசாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்வின் போது, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ர் மற்றும் இலங்கை இராணுவத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமையை போற்றி நிலைய தளபதி வாழ்த்துரை நிகழ்த்தினார்.
பதவி விலகும் மேஜர் ஜெனரலுக்கு படைத்தளபதி அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கலுடன் மாலை நிகழ்வு நிறைவு பெற்றது. அவருக்கு அன்பான பிரியாவிடை வழங்குவதற்காக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியர்கள் பிரியாவிடை இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர்.