Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2024 22:04:56 Hours

இலங்கை பொறியியல் படையணியில் மேஜர் ஜெனரல் எம்பீகே மதுரப்பெரும அவர்களுக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இராணுவத் தலைமையகத்தின் தலைமைக் களப் பொறியியலாளராகிய மேஜர் ஜெனரல் எம்பீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு அவரது சிறப்புமிக்க இராணுவ சேவையின் நிறைவைக் குறிக்கும் வகையில், 09 செப்டம்பர் 2024 அன்று இராணுவ மரியாதை மற்றும் வாழ்த்துக்களுடன் இலங்கை பொறியியல் படையணி படையினர் பிரியாவிடை மரியாதையினை வழங்கினர்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தனது குடும்பத்தினருடன் வருகை தந்ததினை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பிரியாவிடை சம்பிரதாயங்களுக்கு ஏற்ப, பொறியியல் படையணி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் அதிகாரிகள் உணவகத்தில் தேநீர் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொறியியல் படையணி அதிகாரிகள் மற்றும் அவர்களின் துணைவியர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கான பிரியாவிடை இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர்.

பிரியாவிடை இரவு விருந்தின் போது, சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவையை பாராட்டி, பொறியியல் படையணி படைத்தளபதி பிரியாவிடை உரையினை வழங்கினார். இதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் எம்.பீ.கே மதுரப்பெரும அவர்கள் , இலங்கை இராணுவத்தில் தனது பணிக்காலம் முழுவதும் நீடித்த ஆதரவு மற்றும் தோழமைக்காக படைத்தளபதி, படையணியின் அனைத்து நிலையினர் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.