Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2024 21:28:05 Hours

பரா தடகள வீரரின் சாதனைக்கு இராணுவ தளபதியின் பாராட்டு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II கேஏ சமித்த துலான் கொடித்துவக்கு 2024 செப்டெம்பர் 2 ஆம் திகதி நடைபெற்ற பாரிஸ் பராலிம்பிக் போட்டியில் சாதனையை நிகழ்த்தினார். ஆண்களுக்கான எப்44 ஈட்டி எறிதல் போட்டியில், அவர் 67.03 மீட்டர் தூரம் எறிந்து ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் இது அவரது பிரிவில் புதிய உலக சாதனை ஆகும்.

ந்த சிறந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், அவர் 10 செப்டம்பர் 2024 அன்று இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் நாட்டிற்கும் இராணுவத்திற்கும் மகத்தான பெருமையை ஏற்படுத்திய அவரது சிறப்பான செயற்பாட்டிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன் அதிகாரவாணையற்ற அதிகாரி II கேஏ சமித்த துலான் கொடித்துவக்கு அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு சிறந்த உதாரண புருஷர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவரது உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சிக்காக இராணுவத் தளபதி அவரைப் பாராட்டினார். அவரது சர்வதேச வெற்றியை அங்கீகரிப்பதற்காக, இராணுவத் தளபதி அவருக்கு சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் நிதி ஊக்குவிப்புகளை வழங்கியதுடன் மேலும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பயிற்சியாளர் திரு. பிரதீப் நிஷாந்தவின் கடின உழைப்பையும் சரியான வழிகாட்டுதலையும் இராணுவத் தளபதி மிகவும் பாராட்டியதுடன் அவருக்கு விசேட நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.

இந் நிகழ்வில் இலங்கை பொலிஸ் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்எம்எஸ்ஐ செனரத் மற்றும் விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எல்கேடீ பெர்ணான்டே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரும் பங்குபற்றினர்.