Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2024 21:40:40 Hours

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் 59 வது படையலகு தினம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி தனது 59 வது படையலகு தினத்தினை 01 செப்டம்பர் 2024 அன்று 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி எச்பீடிசி திலகரத்ன அவரகளின் வழிகாட்டலின் கீழ் இராணுவ மரபுகள் மற்றும் மத சடங்குகளுக்கு மத்தியில் கொண்டாடியது.

2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி, மாத்தறை விகாரையில் போதி பூஜையுடன், வீரமரணம் அடைந்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில், மாத்தறை, மிகதய விகாரையில் காலை தானமும் வழங்கப்பட்டது.

01 செப்டெம்பர் 2024 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய படையினரால் கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அன்றைய நிகழ்ச்சி நிரலில் படையினருக்கான உரையினை தொடர்ந்து அனைத்து நிலையினருடான தேநீர் மற்றும் மதிய விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.