09th September 2024 15:05:09 Hours
படையலகு பயிற்சி பாடநெறி 2024 இன் நான்காவது நிலை 6 செப்டம்பர் 2024 அன்று படையலகு பயிற்சி பாடசாலையில் நிறைவடைந்தது. இப் பாடநெறி 9 வது இலங்கை பீரங்கி படையணியின் 9 அதிகாரிகள் மற்றும் 231 சிப்பாய்களின் பங்கேற்புடன் 2024 ஜூலை 22 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
நிறைவு விழாவில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார்.
சான்றிதழ் பெற்றுகொண்ட அதிகாரி மற்றும் சிப்பாய்களின் விபரம் பின்வருமாறு
அனைத்து பயிற்சியிலும் சிறந்த மாணவர் – கெப்டன் எச்எம்எல்எஸ் கருணாரத்ன
சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் –பொம்படியர் எச்எம்ஐஎஸ் செனவிரத்ன
சிறந்த உடற் தகுதி வீரர் - சிப்பாய் ஆர்டிடி ரணசிங்க
சிறந்த குழு - 92 வது குழு
சிறந்த பிரிவு - 1வது அணியின் 1வது பிரிவின் தலைமையக குழு