Header

Sri Lanka Army

Defender of the Nation

09th September 2024 20:38:01 Hours

பிரிகேடியர் என்எச் மல்சிங்க அவர்கள் அமெரிக்க இராணுவப் போர்க் கல்லூரியில் வரலாற்று சிறப்புமிக்க பதிவு

பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் என்எச் மல்சிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்எடபிள்யூசீ பீஏஸ்சீ அவர்கள் அமெரிக்க இராணுவப் போர்க் கல்லூரியில் மூலோபாயக் கற்கைகளில் முதுகலைப் பட்டத்தை பெற்று வரலாற்று சாதனையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரிக்கும் கிடைக்காத இந்த கௌரவமான உயர் பட்டதாரி அந்தஸ்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரிகேடியர் என்எச் மல்சிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்எ டபிள்யூசீ பீஏஸ்சீ அவர்களுக்கு 2024 ம் ஆண்டின் வதிவிட கல்விசார் பாடநெறியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவரது வகுப்பில் முதல் 30 சதவீதத்தினரிடையே பட்டம் பெற்று உயர் பட்டதாரியாக அங்கீகரிக்கப்பட்டதில் அவர் பெற்ற வெற்றியானது, அவரது விதிவிலக்கான அறிவுவையும் தொழில்சார் சிறப்புக்கான அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்க இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் என்எச் மல்சிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்எ டபிள்யூசீ பீஏஸ்சீ அவர்களுக்கு இந்த சாதனைகளை அங்கீகரித்து, அவரது மூலோபாய அறிவு மற்றும் தலைமைத்துவ திறன்களை அங்கிகரித்தார். இந்த பாராட்டு அவரது கல்வித் திறனைப் பிரதிபலிப்பது மட்டுமன்றி, இலங்கை இராணுவத்தின் கௌரவத்தையும் அறிவு தன்மையையும் எடுத்துகாட்டுகின்றது.