09th September 2024 08:05:56 Hours
"வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி சவால் கிண்ணம் - 2024" கிரிக்கெட் போட்டி மன்னார் மாநகர சபை மைதானத்தில் 2024 செப்டெம்பர் 07 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவர்களுடன் அப்பகுதியின் அரச மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மன்னார் சமூகத்தினரின் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்பீஎஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பி அவர்களின் கருத்துக்கமைய இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இதனோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பைகள், காலணிகள், பாடசாலை உபகரணங்கள் அடங்கிய அறுபது பரிசுப் பொதிகளும் இப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அறுபது உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
பாட்டா தனியார் நிறுவனத்தின் திரு கிளைவ் மற்றும் திரு பிரசாத் லொகுபாலசூரிய ஆகியோர் நலன்புரி திட்டத்திற்காக தங்களின் உதவியை வழங்கினர், மேஜர் பீர்டி பெரேரா (ஓய்வு) உலர் உணவுக்கான நிதி உதவியை வழங்கினார்.
இந் நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், கௌரவ அதிதிகளாக மன்னார் ஆயர் வண. கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ மற்றும் பிரதேச மதத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கிரிக்கெட் போட்டியில் மன்னார் பெல்கன்ஸ் அணி சம்பியனாகவும், பேண்ட் வாத்தியக்குழு போட்டியில் மன்னார் புனித சர்வேஷியஸ் ஆண்கள் பாடசாலை சம்பியனாகவும் தெரிவாகின.
இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு. கே.கனகேஸ்வரன், மன்னார், வட மத்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜகத்குமார எஸ்எஸ்சீ, திரு.வருணசந்திரபால, மற்றும் படையினர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
54 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 600 பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
மேலும், செல்வரி பிரதேச மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு அமைப்பை வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோர் திறந்து வைத்தனர். 543 காலாட் பிரிகேட் பகுதியின் சார்தா டிவியின் நிதி உதவியுடன் 11 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.