09th September 2024 08:07:28 Hours
இலங்கை இராணுவ விசேட படையணியின் விசேட இராணுவப் வீரரும் 11 வது காலாட் படைபிரிவின் தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு இலங்கை இராணுவ விசேட படையணி தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வு 05 செப்டம்பர் 2024 அன்று வழங்கப்பட்டது.
இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு இலங்கை இராணுவ விசேட படையணி படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரி தனது உரையின் போது அமைப்பிற்கும் நாட்டிற்குமான அவரது சேவையின் போது தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நன்றி பாராட்டினார். .
நட்புறவுடன் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இராணுவ விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாக 1 விசேட படையணி அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்ற பாரம்பரிய பிரியாவிடை இரவு விருந்தில் கலந்து கொண்டார். இரவு விருந்தின் போது, மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும் வழங்கிய உறுதியான ஆதரவிற்கு விசேட படையணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இராணுவ புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரஷாதனி ரணசிங்க, இலங்கை இராணுவ விசேட படையணியின் சேவை வனிதையர் கிளையின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.